ஆதார் அட்டைகளை சாலையில் வீசி சென்றது யார்..?
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூரில் சாலையில் ஆதார் கார்டு ஆதார் அட்டைகள் கிடந்தது. பூவாளூரை முகவரியாக கொண்ட 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தபால் மூலம் வந்த புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டைகளா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் சாலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள், ஆதார் அட்டைகளை கொடுக்க வேண்டிய அஞ்சல் துறையினர் அவற்றை சாலையில் வீசினரா என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





