நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு..!
சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினார்.
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது மனைவி எட்டு வயதான மகன் ஏழு வயது மகளுடன் சிறுமுகை நோக்கி ஆல்டோ காரில் சென்று கொண்டிருந்த பொழுது விபத்து நேரிட்டது.
நெசவாளர் காலனி என்ற இடத்தில் ஆல்டோ கார் மீது இனோவா கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முருகன், ரஞ்சிதா, அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஒருவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.
இனோவா காரை மாணவி ஒருவர் ஓட்டி சென்றதாக கூறப்படும் நிலையில் ஏர்பேக் இருந்ததால் அவர்கள் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் ஆல்டோ காரில் ஏர்பேக் இல்லாததால் அதிலிருந்து அவர்கள் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





