மது ஊற்றி தீ வைத்த நண்பன்.. வெளியான சிசிடிவி..!
பெங்களூரு புறநகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முத்தக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் மற்றும் வெங்கடசாமி ஆகியோர் நண்பர்களுடன் பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாய் தகராறு முற்றி வெங்கடசாமி, நாகேஷ் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நிலையில் தீ பற்றி எரிந்ததுடன் நாகேஷ் உடனடியாக தனது சட்டையை கழட்டியதால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.





