--- --:--:-- --

18 முதல் 22-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும்..!

7

மிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 18ம் தேதி முதல் 22-ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் வரும் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட இரண்டு மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon