இன்று தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி..!
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பயணம் மேற்கொண்டு பரப்பரை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என்று தமிழகம் வர உள்ளார். ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அவரது பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதனை தொடர்ந்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பரப்பரை செய்கிறார்.
இதற்கிடையே நெல்லையில் மேடை அமைக்கும் பணி முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





