--- --:--:-- --

ஆ.ராசாவிடம் ஓட்டு கேட்டு அதிமுகவினர்..!

2

மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் அதிமுகவினர் வாக்கு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கிய சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. உதகை சாலையில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுகவினர் தங்கள் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவளிக்க கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தனர்.

 

திமுக வேட்பாளர் ஆ.ராசா தனது காரில் அந்த வழியாக சென்றார். அப்பொழுது அதிமுக தொண்டர்கள் ஆ.ராசாவிடம் தங்கள் வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசூரத்தை கொடுத்தனர்.

 

அதனை திமுக வேட்பாளரான ஆ.ராசாவும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கை கொடுத்தார். தொடர்ந்து போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து என்று அதிமுக தொண்டர்கள் முழக்கம் இட மறுபக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் எதிர் கோஷமிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon