வடசென்னையில் ராயபுரம் மனோ தீவிரவாக்கு சேகரிப்பு..!
சென்னை வியாசர்பாடியில் வடசென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அதிமுக தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பளித்தார்.
தாரை தப்பட்டை மேளத்தாளத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவருடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் பொழுது சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோருக்கு நன்றி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





