கொலை மிரட்டல்.. விசிக கட்சியினர் மீது அதிமுக ஊராட்சி தலைவர் புகார்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக ஊராட்சி தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊராட்சி தலைவர் அன்பழகன் இது குறித்து மனு கொடுத்துள்ளார்.
அதில் அதிமுகவின் சாதனைகள் குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் அதனை விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள அவர் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





