பைனான்சியர் வீட்டில் ஐடி ரெய்டு.. சிக்கியது என்ன?
சென்னை விருகம்பாக்கத்தில் மக்களவை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக பைனான்சியர் வீட்டில் வைத்திருந்த மூன்று கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரத்னா நகர் பகுதியில் சங்கர் என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ பிரபாகராஜாவின் நெருங்கிய நண்பர் ஆன இவரது வீட்டில் வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் மூன்று கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





