சித்தர் காட்டில் இறந்து கிடந்த ஆடு.. இடம் பெயர்ந்து சென்றதா சிறுத்தை..?
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறை கிணறு மற்றும் தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 கேமராக்கள் மற்றும் மூன்று ஊன்றுகளை வைத்து மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் கடுப்பகுதியில் சிறுத்தை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இரவு நேரங்களில் நடைபெற்ற இந்த தேடுதல் பணியின் பொழுது பொதுமக்களும் வனத்துறையினரை பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் சிரமத்திற்கு உள்ளான அதிகாரிகள் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கோரியிருக்கும் நிலையில் பொதுமக்களிடம் இடையூறு செய்ய வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட 10 கேமராக்களிடம் சிறுத்தை சிக்காத நிலையில் தொடர்ந்து சுந்தர் காடு, கூரைநாடு, செம்மங்குளம் என சிறுத்தை நகர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் சித்தர் காடு தெருவில் ஆடு ஒன்று சிறுத்தையின் கழுத்தில் தாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.





