--- --:--:-- --

வீடு வீடாக தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சிகள் சென்றதால் பரபரப்பு..!

8

பால் வாக்கு சேகரிக்க தேர்தல் அதிகாரியுடன் கட்சி நிர்வாகிகளும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 

85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அதன்படி தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 383 பேர் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் உள்ளனர்.

 

அவர்களிடம் வாக்கு சேகருக்கு சென்ற தேர்தல் அதிகாரியுடன் அரசியல் கட்சிகளும் சேர்ந்து வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை சேகரித்தனர். தேர்தல் அதிகாரிகளுடன் ஒவ்வொரு வீடாக சென்று தபால் வாக்கு சேகரிக்க சென்ற சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

 

Right Menu Icon