வீட்டிற்குள் கேட்ட பயங்கர சப்தம்.. ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பெண்..!
சேலத்தில் தலையில் பலத்த காயத்துடன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீரநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி சுகுணா.
அவர்களையும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஞாயிற்றுக்கிழமையன்று முருகேசன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்று சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த குடியிருப்பவாசிகள் வீட்டினுள் இருந்து சத்தம் வந்ததில் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்து பார்த்தபொழுது தலையில் வலது காயத்துடன் சுகுணா இரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை கைப்பற்றிய பள்ளப்பட்டி போலீசார் கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






