--- --:--:-- --

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த முதலீடு!

eddapadi-01-1496335566

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் 8 ஆயிரத்து 135 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு, இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவிட முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

 

நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 2780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவிட அந்த நிறுவனத்திடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

துபாயில் உள்ள 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யும் வகையிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தன. முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மூலம் தமிழ் நாட்டிற்கு எட்டாயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் புதிதாக 35 ஆயிரத்து 520 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon