ஜார்கண்ட் மாநிலத்தில் சமைக்கும்போது குக்கரின் விசில் பறந்து பெண்ணின் கண்ணுக்கும் மூளை பகுதிக்கும் இடையே புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் குக்கரில் பருப்பை வைத்து விட்டு வீட்டின் பின்புறம் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று உள்ளார்.
குக்கர் பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் நீண்ட நேரம் கழித்து சமையல் அறைக்கு சென்று அடுப்பிலிருந்து கீழே இறக்கி எடுத்து வைத்துள்ளார் .அப்போது குக்கரின் விசில் பிறந்த பெண்ணின் இடது கண்ணில் புகுந்தது பெண்ணின் தலையை ஸ்கேன் செய்தபோது விசில் கண்களை துளைத்து மூளைக்கு நடுவே இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த விசிலை பெண்ணின் தலையில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும் அந்த பெண்ணிற்கு இடது கண் பார்வை பறி போயுள்ளது.