ஆவின் பால் பாக்கெட்டில் புழுக்கள்.. அதிர்ச்சியில் மக்கள்..!
நீலகிரி மாவட்ட உதகையில் தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட் வாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடைக்கு வந்து சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாலை பிரித்து ஊற்றிய பொழுது பாலில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்காரர் அளித்த தகவலின் படி வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி, பாக்கெட்டை சோதனை செய்ததில் பால் பாக்கெட் இன்றைய தேதியில் வெளியீடு செய்யப்பட்டது தெரிய வந்தது. புகார் தொடர்பாக அனைத்து கடைகளிலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆய்வு செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






