நகர் பகுதியில் சுற்றி தெரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்..!
கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் சுற்றி தெரியும் ஒற்றை யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு முதல் பச்சாபாளையம் பகுதியில் சுற்றி வருகிறது. யானையை வனத்திற்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பச்சாபாளையத்தில் இருந்து வெளியேறிய யானை சிறுவாணி வெயில் சாலை பகுதிக்கு சென்றது. அப்பொழுது பொதுமக்கள் அலறியதால் சாலையோர கடைகளுக்குள் யானை புகுந்தது.






