--- --:--:-- --

கரும்பு விவசாயி சின்னம் வழக்கு..இன்று விசாரணை..!

2

ரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு வழங்க கோரி நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது.

 

நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதாலும் தேர்தலில் சின்னனத்தை மிக தாமதமாக கூறியதாலும் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நாம் தமிழர் கட்சி முதலில் வரும் கட்சிக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் என்பது சட்டவிரோதம் என குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் கரும்பு விவசாய சின்னத்தை பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

 

Right Menu Icon