--- --:--:-- --

ஜாதி பெயரை கூறி கோயிலை விட்டு வெளியேற்றியதாக மாற்று சமூகத்தினர் மீது புகார்..!

2

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே கோயிலில் அமர்ந்திருந்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினரை மாற்று சமூகத்தினர் வெளியேற்றியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஆலங்காயம் அடுத்த திமுக ஊராட்சி மன்ற தலைவராக உள்ள கிருஷ்ணமூர்த்தி தனது உறவினர்களிடம் ஆலங்காய் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பராசக்தி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் அமர்ந்துள்ளார்.

 

அப்பொழுது கோயிலுக்கு வந்த மாற்று சமூகத்தினர் சிலர் தங்கள் கோயில் நிர்வாகியாக உள்ள கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களை சாதி பெயரை குறிப்பிட்டு கோயிலை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அப்பொழுது காவல் நிலையத்திலேயே கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon