--- --:--:-- --

மருத்துவர் பரிந்துரை இன்றி இஷ்டத்திற்கு வழங்கப்படும் மாத்திரைகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்..!

8

கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

 

இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் மருத்துவர்கள் வரவில்லை என்றும் ஓபி சீட்டு வழங்கப்பட்ட மருத்துவர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் வழங்கப்படுகிறது எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Right Menu Icon