--- --:--:-- --

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர்..!

6

டெல்லி சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் சிலர் சாலை ஓரத்தில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அங்கு வந்த 2 காவலர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை கால்களால் எட்டி உதைத்து விரட்டியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த இஸ்லாமியர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்மந்தப்பட்ட இரண்டு காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்பொழுது இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon