போக்குவரத்துக்கழக பெண் ஊழியர் தற்கொலை!
ராமநாதபுரம் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உயர் அதிகாரிகள் மீது புகார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றி வருபவர் சோபனா இவர் ஜூனியராக இருந்து வந்துள்ளார். பெண் ஊழியர்கள் 3 பேர் இவர்களை மிகவும் தொல்லை செய்ததாகவும் கடந்த ஒரு மாதமாக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் உயர் அதிகாரிகள் யாரும் அவரின் மேல் நடவடிக்கை எடுக்காததால் இன்று ராமநாதபுரம் அருகே காட்டு ராணி பகுதியில் அவர் குடி இருக்கிறார். அவர் சொந்த வீட்டின் பின்னாடியே கிணற்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .அவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தன்னோடு பணியாற்றி வந்த புவனேஸ்வரி, கமலா மற்றும் பானுமதி ஆகிய 3 பேரும் தன்னை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதில் இதில் அளிக்கப்பட்ட புகாருக்கு கூட உயர் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




