வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் இம்மாதம் 16 நாட்களுக்கு வேலை நாட்களை அறிவித்துள்ளது. வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் சென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் 16 நாட்களை வேலை இல்லாத நாட்களாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் அசோக் லேலண்ட் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் எண்ணுரில் 16 நாட்களும் ஓசூரில் 5 நாட்களும் வேலை நாட்களாக அறிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பிற மாநிலங்களில் உள்ள தனது ஆலைகளிலும் 10 முதல் 18 நாட்கள் வரை வேலையில நாட்களை அறிவித்துள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கு வாகன விற்பனை சரிவை காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவன வாகன விற்பனை 70 சதவீதம் வரை சரிந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் 10 நாட்கள் வரை வேலை நாட்களாக அறிவித்திருந்தது.