இந்தியாவுக்கு டூர் வந்த ஸ்பெயின் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்..!
ஜார்கண்டில் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் தன் எதிரே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி இருசக்கர வாகனத்தில் கடந்த ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள 66 நாடுகளுக்கு பயணம் செய்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்றனர். நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்த அந்த தம்பதி ஒரு சிறிய கிராமத்தில் கூடாரம் அமைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சில இளைஞர்கள் கணவர் கண் எதிரே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பாலில் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம், காவல்துறையினர் நிர்வாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





