--- --:--:-- --

call girl வெப்சைட்டில் இளம் பெண்ணின் போட்டோவை பதிவிட்டு மோசடி செய்த இளைஞர்..!

4

புதுச்சேரியில் பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் கால் கேர்ள் என பதிவு செய்து பணம் சம்பாதித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

 

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மாடலிங் துறையில் உள்ள 25 வயதான பெண் ஒருவர் தனது புகைப்படம் செயலி ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் காரைக்குடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கைது செய்தனர்.

 

புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் செயலி மூலம் புகைப்படத்தை தேர்வு செய்து தொடர்பு கொள்ளும் பொழுது ஆன்லைன் மூலமாக பணத்தை பெற்றுக் கொண்டு பிரபாகரன் ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon