16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு சுற்றுலா சென்ற தாயால் பலியான குழந்தை
பெற்ற குழந்தையை தனியாக விட்டு விட்டு விடுமுறையை கொண்டாட சென்ற கொடூர தயாால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டியன் என்ற பெண் தன்னுடைய 16 மாத பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு விடுமுறையை கொண்டாட ஒரு வாரம் வெளியூர் சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய பொழுது குழந்தை உயிரிழந்து கிடந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை கொன்று கொடூர தாயை காவலர்கள் கைது செய்தனர். கடும் பசி மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொடூர தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது





