இனி மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வராது..!
இனி மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வராது என அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் கூறியதால் பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் பீதியடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சோமசுந்தரம் கலந்து கொண்டார். அப்பொழுது பேசியவர் இனி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வராது.
பட்ஜெட்டில் 8 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. எனவே திமுகவின் கதை முடிந்து விட்டது. இனி மகளிர் தொகை வரவே வராது என்று கூறி பீதியை கிளப்பினார். இதனால் அங்கு பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





