--- --:--:-- --

நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் கைது..!

2

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து செய்தி வழங்கிக் கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும் காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

இது குறித்து அந்த பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தாயிடம் செய்தி சேகரித்ததாக தெரிகிறது. இதனால் நேரலையில் செய்து வழங்கிக் கொண்டிருந்த அவரை ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon