பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்..பைக் ரேஸ் வீலிங் செய்த இளைஞர்கள்..!
நெல்லை மாவட்டம் நவலடியை திசையின்விலை மன்னார்குடி இட்டன்குடி இடைச்சிவிளை உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகளின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
இந்நிலையில் நவலடியில் இருந்து திசையன்விளைக்கு செல்லும் சாலையில் வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது பக்தர்களின் பாதயாத்திரைக்கு இடையூறாகவும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஆபத்து ஏற்படும் என காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





