--- --:--:-- --

பல் மருத்துவ படிப்பிற்கான கட்ஆஃப் தகுதி மதிப்பெண் குறைப்பு!

download (4)

மருத்துவ படிப்பிற்கான நீட் கட் ஆஃப் மதிப்பெண்களை இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது. தேர்வு எழுதும் ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை 50 சதவீதத்தில் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்கள் 40 சதவீதத்திலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45 சதவீதமாக இருந்த தகுதி மதிப்பெண், தற்போது 35 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

 

2019-2020 ஆம் கல்வியாண்டில் மட்டும் இந்த மதிப்பெண் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத மதிப்பெண் குறைக்கும் மூலம் தகுதி பெறும் மாணவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon