வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை என கதறிய பெண்..!
திருச்சியில் பெண்ணை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்த பெண்ணின் திடீர் துருவமாக போலீசார் விசாரணையில் பெண்ணின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாலதி என்பவர் திருச்சியில் தங்கி இருந்த பொழுது கோடி கணக்கில் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கிய பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்துள்ளார். முதல் பணத்தை இழந்த பாரதி கடன் வாங்கியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கோவை சென்றுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் திருச்சி வந்த மாலதியிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். கடன் தொகைக்காக மாலதி இரண்டு மாதமாக வீட்டில் அடைத்து இது சித்திரவதை செய்ததாக வீடியோ வெளியானதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாலதியை மீட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் யாரும் சித்திரவதை செய்யவில்லை என்பதும் தானே போலியாக வீடியோ வெளியிட்டு நாடகமாடியதும் தெரிய வந்தது. கடன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்க இது போன்று நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





