--- --:--:-- --

வளைவில் வேகமாக திரும்பியதால் நிகழ்ந்த விபத்து..!

6

திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு பயணிகளுடன் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே சென்று கொண்டிருந்த மகேந்திரா வேன் கூடுதலாக சாலைவளைவில் திரும்பிய பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது.

 

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிதமான மழை பெய்து கொண்டிருந்த பொழுது சாலை வளைவில் வேகமாக திரும்பியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

 

விபத்தில் படுகாயம் அடைந்து 8 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon