பாஜகவில் இணைகிறாரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி..!
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கட்சி தலைமை விரும்பவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. இது தொடராக டெல்லியில் உள்ள விஜயதாரணியிடம் கேட்டபொழுது உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றுக்காக டெல்லி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவில் இணைய உள்ளீர்களா என்று கேள்விக்கு ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





