--- --:--:-- --

லாரி டயரில் சிக்கி பலியான மாணவன்.. குற்ற உணர்ச்சியில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!

10

ர்நாடகாவில் தன்னால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த குற்ற உணர்ச்சியால் விவசாயி ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

குடக்கு மாவட்டம் சோமவால்பேட்டை தாலுகா கன்னடகுல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் எம்பிஏ படித்து வந்த இளைஞர். கடந்த ஒன்பதாம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது ஒரத்தநாடு கிராமத்தை சேர்ந்த தம்பையா என்பவரின் இருசக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதினார்.

 

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தம்பையாவை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

பின்னர் வீட்டிற்கு வந்த தம்பையா அந்த இளைஞர் உயிர் பிழைப்பது கடினம், வாழ வேண்டிய வயதில் தன்னால் இப்படி ஆகிவிட்டது என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்து மன வேதனை அடைந்த தம்பையா அங்குள்ள காபி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னால் ஒருவர் உயிரிழந்து விட்டார் என்ற குற்ற உணர்ச்சியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon