--- --:--:-- --

X ல் காதல்.. பல லட்சங்களை பிடுங்கிய நபர்..!

10

கிப்ட் பார்சல் வந்திருப்பதாக கூறி சென்னையில் பெண்மணியிடம் 2 கோடியே 87 லட்சம் ரூபாயை சுருட்டிய நைஜீரிய கும்பலை, போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை கேகே நகரை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் ட்விட்டர் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி பழகி வந்ததாகவும் தனக்கு விலை உயர்ந்த பரிசு வழங்குவதாக ஆசை வார்த்தைகளை கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

 

இதனிடைய மும்பையிலிருந்து சுங்கவரித்துறை அதிகாரிகள் பேசுவது போல தொடர்பு கொண்ட நபர் ஒருவர் மலேசியாவில் இருந்து கொரியர் மூலமாக பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் சட்டவிரோதமான போதை பொருட்கள் இருப்பதாகவும் கூறி தன்னை மிரட்டியதாக தெரிவித்து இருந்தார்.

 

போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணத்தைக் கேட்கவே ஜி.பே மூலமாக 2 கோடியை 87 லட்சம் ரூபாய் பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் அனுப்பியதாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மோசடி கும்பல் டெல்லியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுப்பதை கண்டறிந்தனர். டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போன் எண்ணை வைத்து ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்,

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon