--- --:--:-- --

மது போதையில் காரை ஒட்டி விபத்து..!

9

நாகர்கோவில் அருகே மது போதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் டிவிஎஸ், எக்ஸ்எல் வாகனத்தின் மீது மோதி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்ற நிலையில் அசார் என்ற 15 வயது சிறுவன் காருடன் எரிந்து கருகி பலியானான்.

 

காரை ஒட்டி சென்ற கோபி என்பவரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த நபர் மனைவி குழந்தைகளோடு காரை ஓட்டி சென்றது தெரியவந்தது.

 

சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கசிந்த பெட்ரோல் காரணமாக காரும் டிவிஎஸ் வாகனமும் தீப்பற்றிய எரிந்தது. அவற்றுடன் சேர்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலும் எரிந்து கருகியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon