--- --:--:-- --

குடும்பத்துடன் சிக்கன் சாப்பிட்டு சிறுமி பலி..!

3

ரியலூரில் முன் நாளில் சமைத்த சிக்கனை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூராட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – அன்பரசு தம்பதியினர் வீட்டில் கோழிக்கறி சமைத்து தனது குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிட்டு உள்ளனர். மீதமுள்ள சிக்கனை குடும்பத்தார் சாப்பிட்ட நிலையில் 12 வயதான இளைய மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

 

அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்தினம் சமைத்த சிக்கனை சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon