வாய் தகறாரு முற்றியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற கொடூரன்..!
கேரளாவில் பக்கத்து வீட்டு பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கேரளாவின் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. ஏலக்காய் தோட்ட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தன் வீட்டின் அருகே இன்று சக பெண் தொழிலாளிகளுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ஷீலாவுடன் அவரது பக்கத்து வீட்டுக்காரர் சசி என்பவர் வாய் தகறாறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ஷீலாவை வீட்டிற்குள் எடுத்துச் சென்று கதவை உடைத்த சசி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து பெண்ணை மீட்ட நிலையில் படுகாயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர் சசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





