--- --:--:-- --

கள்ளக்காதலை காதலி கைவிட்டதால் கள்ளக்காதலன் செய்த கொடூர சம்பவம்..!

4

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திடீரென தகாத உறவிலிருந்து பின்வாங்கிய காதலியை நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே செலவனூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்.

 

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராணி என்பவர் உடன் தகாத உறவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் திடீரென ராஜனுடன் பழகுவதை ராணி நிறுத்தியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இதைப்போல் சம்பவத்தன்று ராணியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்த ராஜன் அவரை அங்கிருந்த மண்வெட்டியால் தலையில் அடித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon