மோடியின் பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சித்த கனிமொழி..!
மோடியின் பழைய பேச்சை பகிர்ந்து கனிமொழி எம்.பி. கலாய்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி கனிமொழி பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சர் ஆக இருந்த பொழுது நிதி பகிர்வு பற்றி பேசிய காணொளியில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தலைப்பில் காணொளியை பகிர்ந்துள்ளார். அதில் குஜராத் மாநில அரசை என்ன பிச்சைக்காரர்கள் என்று நினைக்கிறார்களா ஒன்றிய அரசிடமிருந்து தங்கள் நிதியை பெற எப்பொழுதும் குஜராத் மாநில அரசு பிச்சை எடுக்க வேண்டுமா என்று பிரதமர் நரேந்திர மோடி அதில் பேசியிருக்கிறார்.
அதனையும் தற்போதைய நிலையும் ஒப்பிட்டு அதனை கிண்டல் செய்துள்ளார்.





