--- --:--:-- --

லிப்டுக்குள் சிக்கி தவித்த செய்தியாளர்கள்.. அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!

6

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் திடீரென மின்தூக்கி பழுதான நிலையில் அதில் சிக்கி தவித்த இருவர் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. அது குறித்து செய்தி சேகரிப்பதற்காக வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் மின் தூக்கில் சென்ற பொழுது மின்தூக்கி திடீரெனப் பழுதாகி மூன்றாவது தளத்திலேயே நின்றது.

 

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வருவதற்கு முன்பாகவே லிஃப்ட் ஆபரேட்டர்கள் மூலம் செய்தியாளர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon