--- --:--:-- --

கள்ள துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

5

திருச்சி அருகே நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் அடுத்த கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கோயில் அருகே வேட்டைக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது நாட்டு துப்பாக்கியில் வெடிமருந்தை நிரப்பும் பொழுது எதிர்பார்த்த விதமாக துப்பாக்கி வெடித்தது. கார்த்தியின் வலது கையில் படுகாயம் ஏற்பட்டது.

 

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு துப்பாக்கி பயன்படுத்திது தெரிய வந்ததை எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon