--- --:--:-- --

ராமர் கோவில் விழா விவகாரம்.. பாஜகவினர் 10 பேர் மீது வழக்கு..!

1

சேலம் அருகே அயோத்தி ராமர் கோயில் விழாவில் டிவியில் ஒளிபரப்பு தொடர்பாக ஏற்பட்ட தள்ளுமுள்ளு விவகாரத்தில் பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

அயோத்தியாபட்டினம் ராமர் கோயில் வளாகத்தில் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை விழாவை டிவி மூலம் காண பாஜகவினர் ஏற்பாடு செய்தனர். அதனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி கோயில் செயலாளர் சங்கர் ஒளிபரப்பை நிறுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

 

இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜகவினர் செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து லேசான தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இது குறித்து செயலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த 10 பேர் மீது அரசு அலுவலகர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon