முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் செய்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறையின் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேளாண்துறை ஆணையராக இருந்த எல்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், சமூகநலத்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மீன்வளத்துறை ஆணையளராக இருந்த கே.எஸ்.பழனிசாமி நில நிர்வாக துறை ஆணையளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூகநலத்துறை முதன்மை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக இருந்த ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு சாலைப் பணிகள் 2ஆவது திட்ட இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.





