வெறும் கைகளால் கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததால் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுநீரோடைகளை சுத்தம் செய்கின்றனர். நாச்சியார்புரம் லட்சுமிபுரம் உள்ள கிராம பகுதியில் பிரம்மசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டு உள்ளது.
அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை போன்ற எவ்வித பாதுகாப்பு உபகரணங்களையும் ஊராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
தங்களுக்கு தொற்று நோய் பரவு அபாயம் ஏற்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவிக்கும் அவர்கள் தங்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.






