இன்று கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்..!
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி வேளாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கான தண்ணீர் திறப்பு குறித்து கண்காணித்து வரும் காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டிற்கான தண்ணீர் திறப்பு குறித்து பரிந்துரைத்தும் வருகிறது. அதன்படி கடந்த மாதம் 19 ஆம் தேதி நடத்த கூட்டத்தில் டிசம்பர் மாதம் வினாடிக்கு 3,128 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
மேலும் ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்குமாறு அறிவுறுத்தியது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கு இருக்க தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






