இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான்.. குடியரசு தின விழா நெருங்குவதால் அச்சத்தில் இந்தியா..!
குஜராத் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்டறிந்தனர்.
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற நபரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர் மன நலம் குன்றியவராக காணப்படுவதால் அவரைப் பற்றிய விபரங்கள் உடனடியாக கண்டறிய முடியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதோடு குடியரசு தின விழா நெருங்கி வரும் சூழலில் எல்லை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






