இளைஞர்கள் தகராறை விசாரிக்க சென்ற காவல் அதிகாரிக்கும் அடி..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கும், இளைஞர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற விழாவின் போது இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த பகுதி மக்கள் செஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்பொழுது உதவி ஆய்வாளருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.






