--- --:--:-- --

சாப்பாடு போட்டியில் 2 பெண்கள் உட்பட 6 பேர் வெற்றி..!

4

பொங்கல் பண்டிகை ஒட்டி தர்மபுரி அருகே நடைபெற்ற சாப்பாடு போட்டியில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வெற்றி பெற்றனர். தர்மபுரி அருகே நடைபெற்ற சாப்பாட்டு ராணி. சாப்பாட்டு ராமன் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

முக்கல் நாயகன் பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கபடி, வழுக்கை மரம் ஏறுதல், முறியடித்த நூல் இட்ட போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டு விளையாடினர்.

 

குறிப்பாக குறைந்த நேரத்தில் சிக்கன் பிரியாணி ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி பலரையும் கவர்ந்தது. போட்டியில் நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு பெண்கள் வெற்றி பெற்று சாப்பாட்டு ராமன், சாப்பாட்டு ராணி பட்டத்தை பெற்றனர்.

 

மேலும் இரண்டு நிமிடத்தில் இரண்டு லிட்டர் குளிர் பானம் குடிக்கும் போட்டி, செங்கல் தொங்கவிடும் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

Right Menu Icon