பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி.. கடும் தள்ளுமுள்ளு..!
புதுச்சேரியில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து கடை முன் குவிந்தவர்கள் உணவு காலியானதால் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காணும் பொங்கலொட்டி புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப்படுத்தி இருந்தனர். அதனை பார்த்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மதியம் 12:30 மணியளவில் பத்து ரூபாய் நாணயம் பெற்றுக் கொண்டு உணவகத்தினர் பிரியாணியை வழங்க தொடங்கினார். ஏராளமானோர் குவிந்திருந்ததால் காத்திருந்த பாதி நபர்களுக்கு கூட பிரியாணி கிடைக்கவில்லை.
நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தி பிரச்சினையை கட்டுப்படுத்தினர்.






