--- --:--:-- --

நண்பனுக்காக நியாயம் கேட்ட இளைஞர்.. துடி துடிக்க கொல்லப்பட்ட கொடூரம்..!

9

சூர் அருகே நண்பனை தகாத வார்த்தையால் திட்டியவரை தட்டி கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்.

 

இவருடைய நண்பர் மஞ்சுநாத். இளைஞர் ஒருவர் அதுபோதையில் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை மஞ்சுநாதன் உதயகுமாரிடம் தெரிவிக்க இருவரும் அந்த இளைஞரை தட்டி கேட்க சென்றுள்ளனர்.

 

இதில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுநாத், உதயகுமாரும் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த மஞ்சுநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon